தீபாவளி நேரத்தில் ஜவுளி கடையில் பறந்த தீப்பொறி…மதுரையில் பரபரப்பு..2 தீயணைப்பு வீரர்கள் பலி

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பற்றிய தீ கடை முழுவதும் பரவியது அப்பொழுது இதை தடுக்க முயற்சித்த 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது மதுரை மக்களை சோக கடலில் ஆழ்த்தியது.

மதுரை:

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது . அந்த நேரத்தில் தீ வேகமாக பரவ தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் காட்சியளித்தது . இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொடர்ந்து கட்டிடம் முழுவதும் பரவிய தீயினால் மெல்ல கட்டிடம் இடிய தொடங்கியது.அப்பொழுது தீயை அணைக்க முழுவீச்சில் ஈடுபட்டு இருந்த சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.காயத்தின் தீவிரத்தினால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.தீபாவளி போன்ற சிறப்பு மிகுந்த நாட்களில் இது போன்று துயர சம்பவம் நடந்தது மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version