கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள தகவல் ஆணையர் ஒருவர் தனது கையில் வேப்பிலையுடன் சுற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், கலந்தாய்வு கூட்டத்திற்கு காரில் வந்து இறங்கிய மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால் மாஸ்க் அணிந்தபடி வாய் மற்றும் மூக்கை வேப்பிலையால் மூடியபடி உள்நுழைந்தார். மேலும், 1 மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தின் நடுவில் அடிக்கடி வேப்பிலையை தனது மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்துக்கொண்டே இருந்துள்ளார்.
Read more – ஆக்ஸிஜன் பற்றாக்குறையா ? இனி இல்லை… புதிய உற்பத்தி ஆலை அமைக்க மத்திய அரசு முடிவு..
கூட்டத்தின்போது மேஜை பகுதியிலும் தனக்கு முன்பாக வேப்பிலை கொத்து ஒன்றை வைத்து இருந்ததாகவும், அவர் சென்று வந்த காரின் முன்பகுதியில் கொத்து, கொத்தாக வேப்பிலைகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கு பார்த்த ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தெரிவித்துள்ளார். கொரோனா பயத்தில் தகவல் ஆணையர் தனது கையில் வேப்பிலையுடன் சுற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.