தமிழகத்தில் டிசம்பர் 2 ந்தேதி மீண்டும் “ரெட் அலர்ட்”

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் டிசம்பர் 2 ந் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

நிவர் புயல் மறைந்த தாக்கம் குறைவதற்குள் வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது.இந்தநிலையில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதனால் டிசம்பர் 2 ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழையில் இருந்து மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version