ஆழியாறு அணையில் அக்டோபர் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு :முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஆழியாறு அணையில் வரும் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 7-ந் தேதி முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2548 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22,116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version