தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.

சென்னை :

நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ஜனவரி 19 ம் தேதி முதல் முதல் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது 9 வகுப்புகள் முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் 8 ம் தேதி திறக்கப்படும் என்ற அறிக்கையை வெளியிட்டார்.

Read more – அதிமுக கொடி பொருந்திய காரில் கிளம்பிய சசிகலா.. சென்னை நோக்கி பயணம்..

மேலும், அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.

Exit mobile version