சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வு.. பொதுமக்கள் கடும் அயர்வு..மத்திய அரசின் மீது கமல்ஹாசன் காட்டம்

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரித்து ரூ.785ஆக உயர்த்துள்ளதால் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை :

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.785ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திடீரென இதன் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் முதல் பல அரசியல் கட்சி தலைவர்கள் வரை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Read more – ஜெயலலிதா எங்கள் ஒளியே.. முதல்வர் பழனிசாமி அவரின் வழியே.. ஓ.பி.எஸ் புகழாரம்

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version