அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை:
நடிகர் ரஜினி காந்த் அரசியலில் எப்பொழுது வருவார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று அவரது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.தொடர்ந்து 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள்,அரசியல் நிலைப்பாடு மற்றும் நடிகர் ரஜினி காந்த்தின் உடல் நிலை போன்ற முக்கியமான விஷயங்களும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் அவர்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.நான் எடுக்கும் முடிவுக்கு கட்டப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனது முடிவானது வெளியிடப்படும் .
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் ரஜினி காந்த் ஒரு உறுதியான நிலைப்பாட்டை அரசியலில் இதுவரை வெளிப்படுத்தவில்லை.அவர்க்கு பிறகு கட்சி தொடங்கிய நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை நிறுவி அதை திறம்பட செயல்படுத்தியும் வருகிறார்.ஆனால் நடிகர் ரஜினி காந்த் 2017 ல் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினி, “தான் அரசியலுக்கு வருவது உறுதி” “தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது.இன்னும் கட்சியின் நிலைப்பாடு,பெயர்,கொள்கை போன்ற மற்ற முக்கியமானவை எப்பொழுது வெளியாகுமோ ? அல்லது வராமலே போய்விடுமோ ? என்ற பல கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.