தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரு விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நிலை சீரான நிலையில் உள்ளது எனக் கூறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து 2 ஆம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். ‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.