இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலக விஐய்சேதுபதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான 800 படத்திக், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகா வெளியான அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என சினிமா, அரசியல், சமூக வலைதளங்கள் என பல தப்பில் இருந்தும் விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலக வலியுறுத்தினர்.
தொடர்ந்து, முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை . அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன் என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை குறிப்பிட்டு விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி..வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 800 படத்தில் இருந்து விலக விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.