காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி: குஷ்பூ பேட்டி

நேற்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சி ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என அறிவித்துள்ளார்.

ஆறு வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பூ நேற்று பாஜகாவில் இணைந்தார். பின்பு சென்னை திரும்பிய அவருக்கு பாஜகாவினர் சிறந்த வரவேற்பை அளித்தனர். அதன் பின்னர் பேட்டி அளித்த குஷ்பூ கூறியதாவது,

ஆறு வருடங்களாக நான் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளேன், தற்போது தான் நான் அவர்களுக்கு நடிகையாக தெரிகிறேனா? காங்கிரஸ் கட்சி மூளை இல்லாத கட்சியாக செயல்படுகிறது. திமுக கட்சியிலிருந்து விலகிய போதும் சரி, காங்கிரசிலிருந்து விலகிய போதும் சரி நான் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. எல். முருகன் எடுத்துள்ள முயற்சியால் நான் பாஜாகாவில் இணைந்துள்ளேன் என கூறியுள்ளார்.

Exit mobile version