நடிகை மீரா மிதூன் மீண்டும் கைது- காரணம் இதுதான்..!!

actress meera mithun
meera mithun

பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான மீரா மிதுனை மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிகாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு, சமூகவலைதளங்களில் தமிழ் சினிமா பிரபலங்களையும் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களை குறித்து அவதூறாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வரிசையில் பட்டியலின மக்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவர் தெரிவித்த அவதூறு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புகார் அளித்ததை அடுத்து, மீரா மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.

சமீபத்தில் ஜாமீனில் மீரா மிதூன் வெளியேறியதை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் இவ்வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அன்று மீரா மிதூன் ஆஜராகவில்லை. இதனால் மீரா மிதுன் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதுடன் அவரை கைது செய்து ஏப்ரல் 4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

Exit mobile version