கட்டுப்பாடுகள் இல்லா ஞாயிறு..இயல்புநிலையில் தமிழகம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 8-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கில் கடந்த அகில வாரங்களாக அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லா முழு ஊரடங்கை சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து அறிவித்தார்.

சென்னையில் ஏற்கனவே முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் என 11 முறை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்த முறை தற்போது ரத்து செய்யப்ட்டுள்ளது.

அந்த வகையில் ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கமான நடைமுறை அமலுக்கு வத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகையான கடைகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வழக்கம்போல வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு, வணிக வளாகங்கள் மற்றும் கோவில்கள் போன்றவை திறக்கப்பட்டு உள்ளதால், ஏராளமான மக்கள் இன்று குடும்பங்களுடன் இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.

அதேசமயம், மக்களும் சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version