பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வால் பல நூறு கோடி ரூபாய்கள் பதுக்கப்பட்டு உள்ளது:மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வெவ்வெறு மாவட்டங்களில் அ.தி.மு.க. தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

துரைக்கண்ணு மரணம்:

வேளாண் அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், அ.தி.மு.க.வின் தலைமை, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்த பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், செய்திகள் வெளியாகியுள்ளன.மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகின்றன. அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம், கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவருமான முருகன் என்பவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

பல நூறு கோடி பதுக்கல்:

பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் மீதான கைது நடவடிக்கைக்காக, மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் களம் இறக்கப்பட்டதிலிருந்தே, இதன் பயங்கரப் பின்னணியை எளிய மக்களும் புரிந்துகொள்ள முடியும்.
வெவ்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கிறது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ஆட்சியின் ‘மாட்சி’ பற்றி வாய் திறப்பாரா?

நடவடிக்கை?

வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை, ஏன் தேர்தல் ஆணையமும் கூட, இதுகுறித்துச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? சீட் பேரத்திற்காக இந்த மோசடிகளை அனுமதிக்கிறதா மத்திய அரசு?இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version