காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ‘நாளைய முதல்வரே’ என ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசலாக முதல் வேட்பாளருக்கான போட்டி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் இறப்பிற்கு பிறகு இப்போதைய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆனார், பின்பு பல அரசியல் குழப்பங்களுக்கு பிறகு தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி முதல்வர் ஆனார். கட்சியை சார்ந்தவர்கள் மௌனம் காத்தாலும் உள்ளே நடக்கும் போராட்டம் அப்பட்டமாக அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட நிர்வாகி ஒருவர், “நாளைய முதல்வரே” என ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி போஸ்டர் ஒட்டி உள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே பல்வேறு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பன்னீர்செல்வத்தை வாழ்த்தி ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.