சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் ஜனவரி 6 ம் தேதி நடத்தப்படும் : அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தகவல்

சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் ஜனவரி 6 ம் தேதி நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு உத்தரவின் பெயரில் சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் சஞ்சய் காந்தி என்பவர் அரியர் தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது,அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன்,வருகின்ற ஜனவரி 6 ம் தேதி முதல் அரியர் தேர்வானது,அந்த ஆண்டு நடக்கவுள்ள பருவ தேர்வுகளோடு சேர்ந்து ஆன்லைன் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Read more-என்ன நடந்தாலும் வேளாண் குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை ரத்து செய்ய முடியாது :பிரதமர் மோடி உறுதி

இதையடுத்து,பல்கலைக்கழகம் வெளியிட்ட அட்டவணைப்படி அனைத்து தேர்வுகள் நடைபெற வேண்டும் எனவும்,மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வுகளின் முடிவுகளை உடனடியாக வெளியிடவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டது.

Exit mobile version