ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி கிடைக்க அசத்தலான திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலினால் ஆம்புலன்ஸ் தத்தலிக்கின்றன.எனவே வாகனங்கள் சாலைகளில் தடையின்றி செல்வதற்கு வசதியாக தானியங்கி சிக்னல் திட்டத்தை சென்னையில் போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி இருக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததும், அதற்கு வழிவிடும் வகையில் சிக்னல்களில் பச்சை விளக்கு தானாகவே எரியும். இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா சந்திப்பு சிக்னலின் அருகில் நடந்தது. போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் இந்த புதிய வகை திட்டத்தை துவங்கி வைத்தார். முதல் கட்டமாக சென்னையில் உள்ள காவேரி, ரேலா மற்றும் குளோபல் ஆகிய 3 தனியார் ஆஸ்பத்திரிகளின் 25 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டும் வழிவிடும் வகையில், 16 போக்குவரத்து சிக்னல்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இருக்கிறது. அடுத்தகட்டமாக 40 சிக்னல்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில் நுட்ப திட்டம் என்று அழைக்கப்படும், இந்த வகை திட்டமானது இந்தியாவிலேயே சென்னையில் முதன் முதலாக தொடங்கப்பட்டு இருப்பதாகவும், போக்குவரத்து போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.

Exit mobile version