ஜெயலலிதா அமைத்த ஆட்சியை நாம் தான் மீண்டும் கையில் எடுக்க போகிறோம் :தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்

மீண்டும் ஜெயலலிதா அமைத்த ஆட்சியை நாம் தான் கையில் எடுக்க போகிறோம் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை:

அ.ம.மு.க பொது செயலாளரும்,ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் தமிழகம் என்றைக்கும் கொண்டாடுகிற மிகப்பெரும் தலைவரான ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்து 4 ஆண்டுகள் ஓடிவிட்டது.பல்வேறு சோதனை காலத்திலும் கம்பீரமாய் நின்று நம் அனைவரையும் வழிநடத்தினார்.தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அவர் பெருமை நிலைக்கும்படி செய்தார்.அப்படிப்பட்டவரின் மறைவுக்கு பிறகு சசிகலா அவர்கள் அரும்பாடு பட்டு இரும்பு பெண்மணியாய் நின்று ஆட்சியை வழிநடத்தினார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்,ஒரு சிலரின் சுயநலத்தாலும்,தவறான நடைவடிக்கையால் எம்.ஜி,ஆர்.உருவாக்கி.ஜெயலலிதா பாதுகாத்து வந்த அதிமுக கட்சி இப்பொழுது தனித்தன்மையை இழந்து நிற்கிறது.தற்போது அவர்களை சுற்றி நிற்கும் கூட்டம் ஆட்சி காலம் முடிந்ததும் காற்றாய் பறந்து விடுவார்கள்.

2011 தேர்தலில் திமுக விற்கு கிடைத்த அதே பரிசு தான் வரும் தேர்தலில் அதிமுக விற்கு தமிழக மக்கள் வழங்குவார்கள்.2016 ல் மீண்டும் ஜெயலலிதா அமைத்த ஆட்சியை 2021 தேர்தலில் நாம் தான் கையில் எடுக்க போகிறோம். அதற்காக வரும் டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா மறைவு நாளில் நாம் அனைவரும் உறுதி எடுத்து வரும் 2021 தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை ஜெயலலிதா நினைவிடத்தில் காணிக்கையாய் வைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version