திருச்சியில் 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவு தயாரித்து பள்ளி மாணவி அசத்தல்…

திருச்சி வையம்பட்டியை சேர்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவு தயாரித்து அசத்தியுள்ளார்.

திருச்சி :

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் வசித்து வரும் தம்பதியினர் ஜெகநாதன்- புவனேஷ்வரி. புவனேஷ்வரி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறது. இவர்களுக்கு ரித்திகா (10), தர்ஷினி (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த குடும்பத்தினர் தங்களின் வீடுகளில் பல்வேறு வகையான மூலிகை செடிகளை வளர்த்து வருவதுடன் அந்த மூலிகை செடி மற்றும் பாரம்பரியமிக்க உணவு வகைகளை சமைத்து வந்துள்ளனர்.இதனால் தர்ஷினிக்கு சிறு வயது முதலே பாரம்பரிய உணவுகளின் மீது ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.

Read more – அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக 1 கோடி வழங்கிய சாமியார் : மிரண்டுப்போன வங்கி ஊழியர்கள்

இதையடுத்து, உலகிற்கு பாரம்பரிய உணவுகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு மணி நேரத்தில் பாரம்பரியமிக்க 55 வகையான உணவுகள் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதன்படி, யுனிவெர்செல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டுஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்டுஸ் சார்பில் உலக கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து நேற்று திருச்சி வையம்பட்டியை அடுத்த கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வெற்றிலை தோசை, மாப்பிள்ளை சம்பா சுவீட் என 40 நிமிடத்தில் 60 வகையான பாரம்பரிய உணவு தயாரித்து அசத்தினார். இவரின் இந்த சாதனைக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இது குறித்து மாணவி தர்ஷினி கூறும் போது, பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் மீண்டும் தங்களின் வழக்கமான வாழ்வில் உணவாக கொண்டு வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version