வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்:அன்புமணி ராமதாஸ்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டு மருத்துவர்கள் இன்றைய நிலையில், பிற நாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவ சேவையாற்றுவதற்காக 50,000க்கும் கூடுதலான மருத்துவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், நடைமுறை எதார்த்தங்களுக்கு சற்றும் பொருந்தி வராத தகுதித் தேர்வும், பிற கட்டுப்பாடுகளும் தான் அவர்களின் சேவைகளை பெறுவதில் தடையாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், அதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால், இத்தேர்வுகள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்தத் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பவர்களில், சராசரியாக 16 விழுக்காட்டினர் மட்டும் தான் தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ள 84 விழுக்காட்டினர் இந்தத் தேர்வுகளில் தோல்வியடைகின்றனர்.
அனுமதிக்க வேண்டும்.


கொரோனா தாக்குதல் இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்புகள் இனிவரும் காலங்களிலும் தொடரக்க்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அத்தகைய சூழலை சந்திக்க இந்தியாவுக்கு அதிக அளவில் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். மிக அதிக எண்ணிக்கையில் புதிய மருத்துவர்களை உடனடியாக உருவாக்குவது சாத்தியமில்லை என்பதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்து விட்டு, இந்தியாவில் சேவையாற்ற விரும்பும் மருத்துவர்களை அனுமதிப்பது தான் எளிதான, பயனுள்ள செயலாக இருக்கும்.


எனவே, இம்மாதம் 31ம் தேதி நடைபெறவுள்ள வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைக்க வேண்டும். அதன்மூலம், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள், இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version