ஐ. பி. எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.கவில் இணைய உள்ளார்!!!

டெல்லியில் ஜே. பி. நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு ஐ. பி. எஸ் அதிகாரி அண்ணாமலை ப. ஜ. க. வில் இணைய உள்ளார்.

கர்நாடக காவல்துறையில் பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகி, தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் பெரியதாக விளக்கம் அளிக்கவில்லை.

திடீரென சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். மேலும், அரசியல் ரீதியாக சில பேட்டிகளையும் அளித்திருந்தார்.மேலும் ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசியதால், ரஜினி தொடங்க உள்ள கட்சியில் இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் பா. ஜ. க. வில் இணையவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டெல்லியில் ஜே. பி. நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு ஐ. பி. எஸ் அதிகாரி அண்ணாமலை பா. ஜ. க. வில் இணைய உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version