பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்..விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

நடப்பு நிதியாண்டில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு ,பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகையை பெற சமூக நல அலுவலகத்தில் இலவச தையல் இயந்திரத்திற்கான விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

  1. வருமானச் சான்று ரூ.72,000க்குள் இருக்க வேண்டும்
  2. இருப்பிடச் சான்று
  3. பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து 6 மாத கால பயிற்சி சான்று
  4. வயது சான்று (20 முதல் 40 வயது வரை) (கல்வி சான்று அல்லது பிறப்புச் சான்று)
  5. சாதிச் சான்று
  6. மனுதாரரின் கடவுச் சீட்டு வண்ண புகைப்படம்-2
  7. ஆதார் அடையாள அட்டை
  8. விதவை கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல்

போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 30.9.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டி முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம் 2ம் தளம், திருவள்ளுர் – 602001. தொலைபேசி எண். 044-29896049 மற்றும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version