தஞ்சையில், பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களைக் கைது செய்யாமல்,சேதப்படுத்தியவர்கள் பற்றி செய்தி வெளியிட்டவர்களை கைது செய்வதா என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று, திருவள்ளூரில் பெரியாரின் திருவுருவச் சிலை, சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது.அதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் மோகன்ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.அதனை தமிழ்நாடு காங்கிரஸ், சமூக ஊடக மற்றும் தொழில்நுட்பத்துறை, திருவள்ளூர் மாவட்டத் தலைவர், முகமது தாரிக் மறுபதிவு செய்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தில், தவறான பொய்ச் செய்தியை பரப்பியதாகக் கூறி முகமது தாரிக், திரு. மோகன்ராஜ் உள்ளிட்ட 4 நபர்கள் மீது மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை, காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, காவல்துறையினர் உடனடியாக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.