எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது எனவும், நிச்சயம் மீண்டு வருவார் என தூத்துக்குடியில் மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் மேடை இசை கலைஞர் களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய எஸ்.பி.பி மீண்டு வர கலைஞர்கள் கூட்டுப் பிராத்தனை !

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் கொரேனாா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல் நலம் மிகுந்த மோசமாகியுள்ள நிலையில் அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வர வேண்டி உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டுகின்றனர். அந்த வரிசையில் இன்று தூத்துக்குடி மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே எஸ்.பி.பியின் பாடல்களை பாடி கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர்.

மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரமே அவருடைய பாடல்கள்தான் என புகழாரம் :

மேடை மெல்லிசை கலைஞர்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை செய்துவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொரோனா காலக்கட்டத்தில் எங்களைப்போன்ற நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 ஆயிரம் உதவித்தொகை வழங்கியர். தற்போது அவரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது நிச்சயம் வேதனையளிப்பதாக மெல்லிசை கலைஞர்கள் தெரிவித்தனர். இதோடு அவருடைய பாடல்கள் இல்லாமல் திரையுலகமே கிடையாது எனவும் மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரமே எஸ்.ப.பியின் பாடல்கள்தான் என கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்ட மெல்லிசை கலைஞர்கள் அவருக்கு புகழாரம் சூடினர்.

Exit mobile version