விவசாயிகள் சார்பாக நாடுமுழுவது தொடங்கியது “பாரத் பந்த்” : தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் குவிப்பு

விவசாயிகள் சார்பில் இன்று நாடுமுழுவதும் “பாரத் பந்த்” என்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு காரணமாக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை:

மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு வார காலமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.இந்த நிலையில் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை மத்திய அமைச்சர்களுடன் நாளை மீண்டும் நடைபெற உள்ளது.

மத்திய அரசு பேச்சுவார்த்தையின் போது,வேளாண் மசோதாக்களில் திருத்தங்கள் வேண்டுமென்றால் கொண்டுவரலாம் ஆனால் முழுவதும் நீக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று அறிவித்தது.இதை முற்றிலும் மறுத்த விவசாய அமைப்பினர் வேளாண் மசோதாக்களை ரத்து செய்தால் மட்டுமே எங்கள் போராட்டம் முடிவு பெரும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.இதற்கிடையில் 3 வேளாண் மசோதா சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று( 8 ந் தேதி) முழு அடைப்பு போராட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தனர்.

விவசாயிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா,தேசியவாத காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகளும்,தமிழகத்தில் திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தினை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் நடத்திட தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு,போக்குவரத்து மற்றும் ரயில் இயக்கங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவித்திருந்தது.தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து ,பொதுமக்கள் பாதுகாப்பிருக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

தனியார் ஆம்னி பேருந்துகள் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பகல் வேளையில் இயங்காது என்று அறிவித்துள்ளது.இன்று மாலை 6 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version