71 பி.எட் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை- ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அதில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 58 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அடையாளம் காணப்பட்ட அந்த 71 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்று கூறியுள்ளது.

Exit mobile version