வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்:மாபெரும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் சசிகலா

அடுத்த ஆண்டு ஜனவரி 27 ம் தேதி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

பெங்களூரு:

சொத்துகுவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது. இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

RTI certificate

இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்தது மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா செலுத்த வேண்டும். மீறி அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.இதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version