பெற்றோர்களே முந்துங்கள்..தனியார் பள்ளிகளில் 1.15 லட்சம் பேருக்கு கட்டணமில்லா கல்வி

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, கடந்த 27ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் உள்ள 1.15 லட்சம் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 25ஆம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில் பெற்றோர்கள் இலவச சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி வரை இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version