அரசு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மறுக்கப்படக்கூடாது – கி.வீரமணி வலியுறுத்தல்

அரசு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மறுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.க. தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள சத்துணவு முட்டைகளை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதும், குறிப்பாக புரத உணவு கிடைப்பதும் மிகவும் அவசியமானது. இந்த நிலையில, பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்தோ அல்லது நியாய விலைக் கடைகளின் மூலமோ முட்டை வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதுபோல், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். கொரோனாவைக் காரணம் காட்டி, ஏழை, எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை அரசு மறுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version