உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது

மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

மதுரை :

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

Read more – வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகையுடன் விவசாயிகள் : மத்திய அரசுடன் நடந்த 8 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

அதன்படி, மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 14 ஆம் தேதி அவனியாபுரம், 15 ஆம் தேதி அலங்காநல்லூர் மற்றும் 16 ஆம் தேதி பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில். உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பங்கேற்க உள்ள மாடு பிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் டோக்கன் முன்பதிவு இன்று தொடங்கியது. சுமார் 14 மருத்துவர்களை இருக்கும் 50 பேர் கொண்ட குழு மாடு பிடி வீரர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில முன்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், ஒரு இடத்தில் நடைபெறும் போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version