மத்திய அரசு புதிதாக கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசு புதிதாக கொண்டுவரும் கல்விக்கொள்கை 2020 குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கையினை எதிர்க்ககோரி திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் தோழமைக்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் எழுதியுள்ள இக்கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, புறக்கணிக்க வேண்டும் எனவும், தேசிய கல்விக் கொள்கை கல்வியில் மதச்சாயம் பூசியும் அதனை வணிகமயப்படுத்துவதோடு சமஸ்கிருதம், இந்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், சம வாய்ப்பு, பன்முகத்தன்மை ஆகிய அனைத்திற்கும் விரோதமாக அமைந்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு மறுத்தும் அதனை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றனர்.