கேரளாவில் பறவைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து கேரளாவிலும் பறவைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியிலும் ஏகப்பட்ட வளர்ப்பு வாத்துகள் இந்த மர்ம பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்து வருகிறது.
இதையடுத்து, இறந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு,அதில் 5 வாத்துகள் பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் எச்5 என்8 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாத்துகள் கொல்லப்பட்டன. மேலும் 36 ஆயிரம் வாத்துகள் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Read more – டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
கேரளாவில் இருந்து பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்கு பரவுவதை தடுக்க கோழிகள், வாத்துகள் கொண்டு வர கால்நடை துறை தடை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், கேரள எஎல்லையிலுள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடை துறை உத்தரவிட்டுள்ளது.