சில்வர் தட்டுகளுக்கு நடுவே வைத்து பிரிட்டிஷ் பவுண்ட் கரன்சி கடத்தல்!!

சென்னை விமான நிலைய  கஸ்டம்ஸ் அதிகாரிகள் கொரியர் மூலம்  அனுப்பப்பட்ட  40 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்ட் கரன்சி நோட்டுகளை அதாவது இந்திய  மதிப்பில் சுமார் 38 லட்சம்  ரூபாய் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு அனுப்ப படுவதற்காக அட்டைப் பெட்டியில் வைத்து இந்த பிரிட்டிஷ் பவுண்ட் கரன்சி ரூபாய்கள் கொரியர் செய்யப்பட்டுள்ளன.

கொரியரில் அனுப்பப்பட்ட இந்த அட்டைப் பெட்டிக்குள் ஸ்டீல்  தட்டுகள்  மசாலா பொருட்கள் மற்றும் ஸ்டீல்டம்ப்ளர்கள் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதனை பரிசோதித்து  பார்க்க  அட்டைபெட்டியைத் திறந்தபோது அதிக எடையுள்ள ஸ்டில் தட்டுகள் இருந்துள்ளன  அதில் 2  தட்டுகள் மத்தியில்  பிரிட்டிஷ் பவுண்டுகள் ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இந்த கொரியர் புக் செய்த சென்னையை சேர்ந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

Exit mobile version