சித்ரா கணவர் ஹேம்நாத் சிறையில் அடைப்பு : திசை திரும்பும் தற்கொலை வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Read more-நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்: மக்கள் சேவை கட்சியா ?

முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் ஹேம்நாத்திற்கும் நடிகை சித்ராவிற்கும் ஏற்கனவே பதிவு திருமணம் நடந்தும்,இதனால் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.மேலும் ஹேம்நாத்திற்கும் நடிகை சித்ராவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என்ற அடிப்படையிலும் விசாரிக்கப்பட்டது.

திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் இந்த தற்கொலை நடந்த நிலையில் இந்த வழக்கானது ஆர்.டி.ஓ. வுக்கு மாற்றப்பட்டது. நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் பெற்றோர்கள் மற்றும் சகோதர,சகோதரிகளிடம் விசாரணை நடைபெற்றது.இன்று ஹேம்நாத் மற்றும் அவரின் பெற்றோர்கள் விசாரிக்க இருந்த நிலையில் நேற்று இரவு நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version