நீட் தேர்வு பயத்தால் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், அதெல்லாம் தடை பண்ண கூடாது எனும் பாணியில், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசியுள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது. தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடராப்பட்ட பல்வேறு வழக்குகளும் கூட தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தேர்வு பயம் காரணமாக கடந்த வாரம் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் எனும் மாணவன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, நேற்றே துர்காஸ்ரீ தேவி மற்றும் ஆதித்யா திருச்செங்கோட்டில் மோதிலால் என்ற மூன்று மாணவர்கள் அடுதடுத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் நிட் தேர்வுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘ஆண்டுதோறும் பிளஸ் டு தேர்வு முடிவுகள் தோல்வியால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே போல காதல் தோல்வியாலும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய சட்டம் போட முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.