பட்டியல் இனத்தை சேர்ந்தவரை ஆதிக்க சாதியினர் காலில் விழ வைத்த சம்பவம்: 7 பேர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பட்டியல் இனத்தை சேர்ந்தவரை ஆதிக்க சாதியினர் காலில் விழ வைத்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலராஜ் இவருக்கு சொந்தமாக செம்மறியாடுகள் உள்ளன சம்பவத்தன்று இவரது ஆடுகள் அருகே உள்ள ஆதிக்க சாதியை சேர்ந்த சிவசங்கு என்பவரது ஆட்டு பட்டிக்கு சென்றதாக கூறப்படுகின்றது

பாலராஜுக்கும் சிவசங்குக்கும் ஏற்கனவே முன்விரோதம் நிலையில் சிவசங்கு இந்த சம்பவத்தை காரணம் காட்டி தன் உறவினர்களோடு சென்று பால்ராஜை தாக்கியுள்ளார் மேலும் அவரை தன் காலில் விழ வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, கயத்தார் காவல் நிலையத்தில் சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version