நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகர், புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், இதுவரை தேவாலாவில் அதிகபட்சமாக 12 செ.மீ மழையும், ஏற்காட்டில் 10 செ.மீ, வால்பாறையில் 9 செ.மீ மற்றும் சின்னக்கல்லாரில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.