ரூபாய் 1000 கொடுங்க, சைக்கிளை எடுங்க :சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

மாதந்தோறும் சைக்கிளை பயன்படுத்துவதற்கு, ரூபாய் 1000 கட்டணத்தில் சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
chennai corporation

சென்னை:

புது திட்டம் :

சென்னை மாநகராட்சி ஏற்கனவே சைக்கிள் ஷேரிங் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது, மாத வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

1000 ரூபாய் கட்டணம்:

பொதுமக்கள் மாத வடகைக்கு சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாரத்துக்கு ரூ.299, 15 நாள்களுக்கு ரூ.599, 30 நாள்களுக்கு ரூ.999ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சைக்கிள் பெற விரும்புவோர், 044 – 26644440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொணடு தங்களது சைக்கிள் தேவையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

150 சைக்கிள்கள்:

முன்பதிவு செய்ததும், பயனாளரின் வீட்டு முகவரிக்கே, சைக்கிளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்து கொடுக்கும். அப்போது பொதுமக்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்த நாள்கள் வரை, சைக்கிளை பயனாளர் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர், சென்னை மாநகராட்சியே வந்து சைக்கிளைப் பெற்றுச் செல்லும்.

இந்த திட்டத்தின் துவக்கமாக, சென்னையில் ஷெனாய் நகர், அண்ணாநகர் மேற்கு, திருமங்கலம், முகப்பேர், அண்ணாசாலை, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்களில் இருக்கும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version