சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(04.11.2020)முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும், 4-ந்தேதி மதுரை, கோவை, சிவகங்கை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 5-ந்தேதி டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், அடுத்த 24 மணிநேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Exit mobile version