சென்னை நந்தனம் மெட்ரோ ரெயிலின் தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் வணிக வளாகம் கட்டுவதற்கும், தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கான ஆலோசனை கூட்டமானது நடந்தது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற் நிதி இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா அவர்கள் தலைமை வகித்தார். திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு துறை பொது மேலாளர் கிருஷ்ணன், இணை பொது மேலாளர் நரேந்திரகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்க தேவையான இட வசதிகள் எல்லாம் உள்ளன. நேரு பூங்கா, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, மத்திய சதுக்கம், மண்ணடி, விம்கோ நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு சொந்தமான இடங்களில் 3 ஆயிரம் சதுர மீட்டர் முதல் 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலும் உள்ளது. இங்கே வணிக வளாகம், சிறு குறு மற்றும் நடுத்தர கடைகள் எல்லாம் வைப்பதற்கு கூட இடவசதி தாராளமாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் https://chennaimetrorail.org/wp-content/uploads/2023/05/list-of-Empanelled-consultants.pdf என்ற இணையதள பக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என கூட்டத்தில் பிரசன்ன குமார் ஆச்சார்யா அவர்கள் கூறினார்.
சென்னை நந்தனம் மெட்ரோவில் வணிக வளாகம் கட்ட திட்டம்
-
By mukesh
Related Content
கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?
By
daniel
November 27, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024
மாமதுரை விழா!
By
daniel
August 8, 2024