பிரதமர் வருகை – காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் இன்று (அக்டோபர் 11) காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பரத்திலிருந்து வரும் இந்த வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலை நோக்கியும், பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் சர்வதேச விமான நிலையச் சந்திப்பில் தாம்பரம் நோக்கியும் திருப்பிவிடப்படும். மவுண்ட்–பூந்தமல்லி சாலையில் கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கித் திருப்பிவிடப்படும்.
கத்திப்பாரா, கிண்டி, ராமாபுரம், காந்தி மண்டபம் மற்றும் வேளச்சேரி பகுதிகளிலும் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கு மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, போக்குவரத்துக் காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version