பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் புகழ்பெற்றசிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு மிக்கவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருகிறார். அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழாவானது கடந்த 17-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்ட அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பியவாறு தரிசித்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த விழாவிற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் இணைந்து ஒருங்கிணைத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணித்திருமஞ்சன வழிபாடு சிதம்பரத்தில் அருள் பாலித்த நடராஜ பெருமான்!
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025