ஊராட்சித் தலைவி அவமதிப்பு: ஊராட்சி செயலர், துணைத்தலைவர் சஸ்பெண்ட் !

ஊராட்சி தலைவர் அவமதிப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

சிதம்பரம் மாவட்டம் தெற்குத் திட்டைச் சேர்ந்த  ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அவமதித்து தரையில் அமர வைத்தனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு ஆதரவு தெரிவித்து பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் ஊராட்சி செயலர் சிந்துர்ஜா, தெற்குத் திட்டை ஊராட்சித் துணைத்தலைவர்மோகன் ராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஊராட்சி செயலர் சிந்துர்ஜா, தெற்குத் திட்டை ஊராட்சித் துணைத்தலைவர்மோகன் ராஜ் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version