அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு : முதல்வர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

read more – அமெரிக்க விண்வெளிப்படை பிரிவினருக்கு ‘கார்டியன்ஸ்’ என பெயர் வைப்பு

பொங்கல் பரிசுப் பொருட்கள் ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்கள்  வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு அதன் பின்னர், பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டுமென  டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.

Exit mobile version