க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ் பதிப்புலகத்தில் மிகவும் பிரபலமான க்ரியா ராமகிருஷ்ணன் இன்று காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் இரங்கல்:

தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னணிப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.


‘க்ரியா’ ராமகிருஷ்ணன் சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் எனப் பல தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ‘க்ரியா’ ராமகிருஷ்ணனின் மறைவு தமிழ்ப் பதிப்புலகத்திற்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்,

Exit mobile version