தேசிய பத்திரிகையாளர் தினம் : முதல்வர் வாழ்த்து

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட ‘தேசிய பத்திரிகை தின’ வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசிய பத்திரிகையாளர் தினம்:

பத்திரிகை துறையின் பணிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.அ.தி.மு.க. அரசு, பத்திரிகையாளர்களின் நலனை காக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

முதல்வர் வாழ்த்து :

உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகை துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version