இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
Read more – மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :
“இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அவர்களது மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே அது உருமாறிய கொரோனாவா என்பது குறித்து தெரியவரும். கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் மக்கள் முககவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வருவதால் தொடர் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்” என்று கூறினார்.