கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா இலவசம் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இணைய வழி ஆன்லைன் கல்விக்காக கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2 GB Data)பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Read more – பார்த்ததோ மனிதனின் கால் விரல்.. கிடைத்ததோ வேறு ஒன்று.. பயத்தில் பெண் அழைத்ததால் குவிந்த போலீஸ்

இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) 2 ஜிபி இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version