தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பலனாய் நிவர் புயலினால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி.இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற்றது அனைவரது ஒட்டுமொத்த முயற்சியாகும் என்றார்.
மேலும் அவர் நிவர் புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்த புயலினால் மக்களும் பெரிதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்த அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.
அதனை தொடர்ந்து , தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை.தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.