கனவிலும் கூட ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கனவிலும் கூட ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை :

உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது :

தமிழக மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக அரசு கொண்டு வராது என கூறினார். மக்கள் நலனை சிந்திக்காத கட்சி திமுக தான். அதனால் தான் தமிழக மக்கள் 10 ஆண்டுகளாக திமுகவை ஆட்சியில் அமர வைக்கவில்லை என்றார்.

Read more – எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவில்லை எனில் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயார் : ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்

இந்தியாவிலேயே ஊழலுக்கு சொந்தக்கார இயக்கம் திமுக தான் திகழ்கிறது. ஊழல் என்ற சொல்லே அவர்களது ஆட்சியில் தான் வந்தது என்றும், மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் உடனடியாக தீர்வு காணப்பட்டிருக்கும் என்றார்.மேலும், கனவில் கூட ஸ்டாலினால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version