தமிழகத்தில் 38 வது மாவட்டமாக உதயமாகியது மயிலாடுதுறை :தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தை 38 வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:

தமிழகத்தில் 32 மாவட்டங்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உதயமானது.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியாளர்களும் நியமிக்கப்பட்டு வந்தனர்.அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு வெளியிட்டது.

Read more – தி.மு.க விற்கு சனிப்பெயர்ச்சி, அ.தி.மு.க விற்கு எந்த பிரச்சனையும் கிடையாது : அமைச்சர் ஜெயக்குமார்

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தை 38 வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Exit mobile version